முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமின் மனு தள்ளுபடி.!
நீதிபதிகளை அவதூறாக பேசியதற்காக கைதான ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மேற்கு வங்க நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சமீபத்தில் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து யூடியூப்பில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பார்கவுன்சில் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2ம் தேதி முன்னாள் நீதிபதி கர்ணனை கைது செய்தனர். கைதை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க கோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கர்ணனின் ஜாமீன் மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.