ஆம்லெட் பரிமாறுவதில் வந்த பிரச்சனையால் உணவக ஊழியர் சுட்டு கொலை!
டெல்லியில் உள்ள உணவகத்தில் ஆம்லெட் பரிமாறுவதில் வந்த பிரச்சனையால் உணவக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
மத்திய டெல்லியின் சாந்தினி மஹால் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் 27 வயதுடைய நபீஸ் எனும் இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த உணவகத்துக்கு உணவு உண்ண வந்த இரு தரப்பினரிடயே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் உணவு பரிமாற கூடிய 27 வயதுடைய இளைஞன் யாருக்கு முதலில் ஆம்லெட் பரிமாறுகிறார் என்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு குழுவினருடன் உணவு பரிமாறுபவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வலது தொடையில் அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுள்ளார். ஒருமுறை மட்டுமல்லாமல் அவர் மீது இரண்டு முறை துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சுள்ளர். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளஞரை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தகவலறிந்த காவல்துறையினர் குற்றம் நடந்த இடத்தில் இருந்து 4 வெற்று குண்டுகளை கைப்பற்றியதுடன் பாதிக்கப்பட்டவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நபீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நபீஸை கொல்ல முயற்சித்த குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த நபீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்ய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.