நான் நாட்டுக்காக போரிட்ட போது மோடியும், அமித்ஷாவும் சிறுபிள்ளைகள் – முன்னாள் ராணுவவீரர்

Default Image

எது எப்படி இருந்தாலும், விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை போரை எதிர்கொள்வதை போலவே அணுகுவேன் என முன்னாள் ராணுவ வீரர் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் சிங்கு பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் விவசாயிகளில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் முன்னால் இராணுவ வீரரான ஜோகிந்தர் சிங். இவர் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர். இவர் 1961 முதல் 1991 வரை சுமார் 28 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து பணியாற்றியுள்ளார்.

இந்த போராட்டம் குறித்து அவர் கூறுகையில், நாட்டின் வளங்களை கடந்த 1990களில் இருந்து மத்திய அரசு கார்ப்பரேட்டிடம் ஒப்படைத்து வருகிறது. இப்போது விவசாயிகளையும் அப்படி செய்ய முயற்சிக்கிறது. ஆனால், நான் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகுதான் வீடு திரும்புவேன் என கூறியுள்ளார். மேலும், போராட்டத்தில் தேசத்துரோகிகள், நக்சலைட் ஊடுருவல் மற்றும் வெளிநாட்டினர் சதியினால் தான் போராட்டமே நடப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், அதுமாதிரியான நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள இடத்தில் எனக்கு என்ன வேலை என  ஜோகிந்தர் சிங் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் நாட்டுக்காக போரிட்டபோது மோடியும், அமித்ஷாவும் சிறுபிள்ளைகள். மெய்யான தேசபற்றோடு போராடும் ஒருவரை இப்படி பழிப்பது சரியல்ல. அது மந்திரங்களை ஓதும் பூசாரியை கேலி செய்வதற்கு சமம். எது எப்படி இருந்தாலும், விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை போரை எதிர்கொள்வதை போலவே அணுகுவேன் என தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமிர்தசரஸ் விவசாயம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்