ஆர்யா & விஷால் கூட்டணியில் உருவாகும் “எனிமி” படத்தின் அப்டேட்..!
விஷால்-ஆர்யா நடிக்கும் எமினி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.
எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன்,தமிபி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.”Enemy” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது விஷால்-ஆர்யா நடிக்கும் எமினி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
@arya_offl ENEMY @VishalKOfficial 1st look will be out tomorrow at 11am @anandshank @mirnaliniravi @MusicThaman @MiniStudio_ @vinod_offl @MusicThaman @RDRajasekar @VffVishal #Vishal #Arya #Vishal30 #Arya32 pic.twitter.com/1gXo0dZGP7
— Vishal Xpress (@VishalXpress) December 16, 2020