சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – கொலிஜியம் பரிந்துரை!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி வரும் 31-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தால் தஹில் ரமணி மேகாலயாவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் பதவியை ராஜினாமா செய்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.
இதைத்தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.அதன்படி தற்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்து வருகிறார். டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் இவர் பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.இதனால் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்ஜீப் பானர்ஜி. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சஞ்ஜீப் பானர்ஜி, தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.