மதுரையில் காவல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு..,
மதுரை: மதுரை மாநகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் போலீசார் ரோந்து பணியில் கடந்த சில நாட்களாக தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து,மற்றும் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐகள் என அனைவரும் இரவு 9 மணி வரையில் ரோந்து பணியில் இருக்க வேண்டும் என துணை கமிஷனர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.