நாளை வெளியாகிறது மாஸ்டர் டீசர்.!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த படம் திரையரங்குகளில் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .மேலும் படம் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .மேலும் கடந்த தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது .
இன்று கூட மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் அதிகம் கமெண்ட் செய்த முதல் டீசர் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணி அளவில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.