IPL 2018:ஹைதராபாத் பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான் …!
11 வது ஐ.பி.எல் சீசனில் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகின்றனர்.
இன்று நடைபெறும் நான்காவது போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்நிலையில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 14 ஓவரில் 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக சம்சன் 48 ரன்கள் அடித்தார்.
இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
அந்த அணியில் 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் மேலும் ஒரு ரன் எடுக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்து அரை சதத்தை தவறவிட்டார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் அவுட் ஆகியுள்ளனர். ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்குமார் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் 126 ரன்கள் என்ற இலக்கு ஹைதராபாத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.