சிலிண்டர் விலையை திரும்பப்பெற ஸ்டாலின் வலியுறுத்தல்.!
15 நாள் இடைவெளியில் உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை ரூ.100-ஐ திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உயர்த்தப்பட்ட விலையை திரும்ப பெற்று முந்தைய விலையிலேயே கேஸ் சிலிண்டரை டிசம்பரில் விநியோகிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா சூழலில் விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர் கடமை. இல்லாவிட்டால் தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டிசம்பர் 01-ஆம் தேதி வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.610 லிருந்து ரூ.660 ஆகவே உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.660 லிருந்து ரூ.710 ஆகவே உயர்ந்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 நாட்களில் ரூ.100 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 நாள் இடைவெளியில் ரூ.100 #LPGPriceHike#Covid19 ஏற்படுத்திய தாக்கத்தால் மக்கள் அவதிப்படும் நிலையில், ஆட்சியாளர்களோ உதவிக்கரம் நீட்டமாட்டோம் என்கிறார்கள்!
டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையில் வழங்குக!
இல்லையெனில், தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது. pic.twitter.com/SS76carvzz
— M.K.Stalin (@mkstalin) December 16, 2020