ஐபிஎல் வேண்டாம் என்பவர்கள் திரைப்படத்தை திரையிடக்கூடாது,எடுக்கக்கூடாது என கூறுவார்களா?மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி ?
ஐபிஎல் வேண்டாம் என்பவர்கள் திரைப்படத்தை திரையிடக்கூடாது,எடுக்கக்கூடாது என கூறுவார்களா? என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன் சிம்பு , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு இந்த விவகாரம் குறித்து தெரியும். நான் அவரை எந்த போராட்டத்திலும் ஈடுபட சொல்லவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என கூறவில்லை. போட்டிகளின் போது கருப்பு பேட்ஜ் அணியுங்கள் இல்லையென்றால், உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அல்லது செய்ய முடிந்ததை செய்யுங்கள் என தோனிக்கு கோரிக்கை வைக்கிறேன். தோனிக்கு நம் மீது மரியாதை உள்ளதால் இதனை அவரிடம் கேட்கிறேன்” எனத் தெரிவித்தார்.அதே போல் நடிகர் ரஜினியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி பிரச்னையில் தமிழர்களுக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பிரதமருக்கு திமுக கருப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளனர். ஐபிஎல் வேண்டாம் என்பவர்கள் திரைப்படத்தை திரையிடக்கூடாது,எடுக்கக்கூடாது என கூறுவார்களா? காலதாமதம் ஆனாலும் காவிரி பிரச்னையில் மத்திய அரசு நிரந்திர தீர்வை ஏற்படுத்தும்.காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை மத்திய அரசு கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்; அதில் உள்ளவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.