செட்டிநாடு குழுமத்தில் ஐடி ரெய்டு – ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.!

செட்டிநாடு குழுமத்தில் சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வருமானத்தை கணக்கில் காட்டப்படாததும் தெரிய வந்துள்ளது.

தமிழகம், ஆந்திர உள்பட செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் கடந்த 9-ஆம் தேதி நடந்த வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். ரூ.110 கோடி வெளிநாட்டு சொத்துகளும் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ரூ.700 கோடி வருமானத்தை கணக்கில் காட்டப்படாததும் தெரிய வந்துள்ளது.

மேலும் கருப்பு பண சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். மருத்துவ சீட்டு வழங்கியதில் மோசடி நிகழ்ந்திருக்கிறது எனவும் கூறியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்ற பணம், ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யக் கூடிய பணியில் ஈடுபட்டுள்ளனர். செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான நிர்வாகிகள் மற்றும் இயக்குனர்கள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். இதில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.