ரஜினியின் கட்சி பெயர் மற்றும் சின்னம் என்ன தெரியுமா?

நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, தனது அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு.’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விவரமாக செயல்பட்டு வந்த ரஜினி, கட்சிக்காக சில பெயர்களையும் பரிசீலனை செய்துள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்திற்கு, தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்த நிலையில், அதற்கு பதிலாக 234 தொகுதிகளிலும், மக்கள் சேவை கட்சிக்கு, ‘ஆட்டோ’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025