முடங்கிய யூ டியூப் உள்ளிட்ட செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது
யூ டியூப் உள்ளிட்ட செயலிகள் கடந்த சிறிது நேரமாக சர்வர் கோளாறு காரணமாக முடங்கிய நிலையில்,தற்போது அவை சரி செய்யப்பட்டு செயல்பட தொடங்கியது.
கூகுள் நிறுவனத்தின் ஜி -மெயில்,கூகுள் டாக்குமெண்ட்ஸ்,பிளே ஸ்டோர், யூடியூப் உள்ளிட்டவை உலகம் முழுவதும் முடங்கியது. வீடியோ காட்சிகளை பகிரும் இணைய தளமான யூ டியூப் செயல்பட வில்லை என்பதால் செல்போன்கள் மூலம் யூ டியூப்பை பயன்படுத்துவோர் அவதிக்குள்ளாகினர்.சர்வர் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதனை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் கடந்த சிறிது நேரமாக முடங்கியிருந்த கூகுள் செயலிகள் படிப்படியாக மீளத் தொடங்கின.