பாஜக கிண்டல் …! காங்கிரசின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு கேலிக்கூத்து ….!
பாரதிய ஜனதா கட்சி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் ஒரு கேலி கூத்து என்று கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரனாவின் மகனும், பா.ஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான ஹரீஷ் குரானா, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டல்களில் உணவருந்திய பின்னரே போராட்டத்திற் வந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னணியினரான அஜய் மேகான், ஹரூண் யூசூப், அரவீந்தர் சிங் ஆகியோர் உணவருந்தும் படத்தை சுட்டிக்காட்டி உள்ள ஹரீஸ் குரானா, நன்றாக உண்ட பின்னரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் வித்தையை காங்கிரஸ் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கிண்டலடித்து உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.