நாசா முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது…..!
முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விண்கலம் அனுப்புகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலத்தை, நாசா உருவாக்கியுள்ளது.
இந்த விண்கலம் புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து வரும் ஜூலை 31-ஆம் தேதி ஏவப்படவுள்ளதாக நாசா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 400 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், சூரியனின் மேற்பரப்பில் இருந்து, 59 லட்சத்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும். சூரிய வளிமண்டலத்தின் வெப்பநிலை உள்ளிட்டவற்றை இது ஆய்வு செய்யும்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.