இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன் – கொரோனாவில் இருந்து மீண்ட சரத்குமார்.!
கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக சமத்துவ கட்சி தலைவர் சரத்துக்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சரத்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 8-ம் தேதி தெரிவித்திருந்தார். ஐதராபாத்தில் கொரோனா பரிசோதனை செய்த போது சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அறிகுறிகள் ஏதுமின்றி தொற்று உறுதி உறுதியான காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக சரத்துக்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்புகிறேன்.
உடல்நலம் குணமடைய உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், டயட்டீஷியன், தூய்மை பணியாளர்கள், வார்டு செக்யூரிட்டிகள் எல்லாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிசசையில் பங்கெடுத்த அவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும் தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள் சமத்துவ சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
#ThankYou pic.twitter.com/PnhRoriWcG
— R Sarath Kumar (@realsarathkumar) December 13, 2020