ஆப்பிள் நிறுவனம் ஆட்டோ மொபைல் துறையிலும் தடத்தை பதிக்கவுள்ளது:- பிராஜக்ட் டைட்டான்
புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது புதியவிதமான தரமான தயாரிப்புகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. உலகில் பலர் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டெக்னாலஜி துறையில் முன்னனியில் உள்ள இந்த நிறுவனம் தற்போது ஆட்டோ மொபைல் துறைக்கு வருகிறது. இதற்கான பணியை கடந்த 2014ம் ஆண்டே துவங்கிவிட்டது.
ஆப்பிள் நிறுவனம் தானாக இயங்கும் கார்களை தயாரித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு சுமார் 1000 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி அவர்களை கார் தயாரிப்பு குறித்து ஆய்வு ரகசிய இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது அந்த குழு முழு தொழிற்நுட்ப டிசைனுடன் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் இந்த தொழிற்நுட்பத்தை பொருத்தி அமெரிக்காவில் உள்ள ரோட்டில் அந்நாட்டு அரசின் அனுமதியுடன் பரிசோதித்து பார்த்தது.இதன் மூலம் விபத்துக்களில் இருந்து ஆப்பிள் கார்கள் எப்படி காத்துக்கொள்கிறது. மோசமான ரோடு மற்றும் வானிலைகளை எப்படி சமாளிக்கிறது என பரிசோதிக்கவுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் நடத்தி வரும் இந்த ஆய்வுக்கு பிராஜக்ட் டைட்டான் என பெயரிட்டுள்ளது. இந்த பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில் உடனடியாக தயாரிப்புகளை துவங்க வரும் 2019 இறுதி அல்லது 2020ல் கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அமெரிக்காவில் ஓடுவதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆமெரிக்க அரசிடம் சில சட்டங்களுக்கான விளங்கங்களையும், சில சட்ட திருத்தங்களையும் மேற்கொள்ள கோரியுள்ளது
இது குறித்து கடந்த 2017ம் ஆண்டே ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் இந்த காரின் டிசைன் மாடலுடன் டி.வி.களில் பேசினார். அவர் கூறுகையில் :”ஆப்பிள் நிறுவனம் ஆட்டோ மொபைல் துறையிலும் தங்களது தடத்தை பதிக்கவு்ளளது. இதற்காக டிரைவிங் தொழிற்நுட்பத்தை தயாரித்து வருகிறோம். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2008ம் ஆண்டு ஐபோன் ரிலீஸ் ஆகிய புதிதில் கார்களை தயாரிக்கும் எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அது அப்பொழுது முடியவில்லை, இப்பொழுது அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம் ” என கூறியிருந்தார்.
தற்போது வரை ஆப்பிள் நிறுவனம் தானாக கார் இயங்கும் இயங்குதளத்தைதான் உருவாக்கி அதை மற்ற கார்களில் இன்ஸ்டால் செய்து பரிசோதனை நடத்தி வருகிறது. தற்போது அந்த இயங்குதளம் இயங்கும் ஹார்டுவேர்கள் மற்றும் மற்ற டிசைன்களை செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பிளாக்பெர்ரியின் க்யூ.என்.எக்ஸ் நிறுவனம் ஆட்டோமோட்டிவ் சாப்ட்வேர்களை செய்து வருவதால அந்த நிறுவனத்தின் பணியாட்களை வேலைக்கு எடுக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் apple.car, apple.cars, apple.auto, ஆகிய இணையதள முகவரி பெயர்களையும் அதற்காக வாங்கியுள்ளது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் இந்த காருக்கு வழக்கம் போல i car, என்றே பெயரிட்டுள்ளது. தற்போது ஆப்பிளின் ஐகாரை தயாரிக்க நிசான், டொயோட்டா ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்டமான ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த காரின் டிசைனை மற்ற நிறுவனங்களில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவோ ஆட்டோமெட்டிங் கார்களை தயாரிக்க ஆய்வுகள் நடத்தி வருகிறது.
ஆப்பிள் காரில் உள்ள சில அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவை அதிகாரபூர்வ அறிவிப்புகள் இல்லை.முதலில் ஆப்பிள் காரின் டோர்கள் தானாக இயங்குக்கூடியது. காரின் டோரில் நீங்கள் கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை. காரின் உட்புறத்தில் ஸ்டியரிங் வீல், பேடல், என எதையும் அவர்கள் பொருத்தப்போவதில்லை, கார் முழுவதும் தானியங்கி காராக மட்டுமே செயல்படும், காரின் உட்புறம் ஆர்கியூமென்டட் ரியாலிட்டி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கார் பெட்ரோல்/ டீசல் இல்லாமல் முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயக்குகிறது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 320 கி.மீ. வரை பயனிக்கும் திறனுடன் இதை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.