IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி …!மும்பையுடனான போட்டியில் வெற்றி பெற காரணமான வீரர் விலகல் …!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி “த்ரில்’ வெற்றி கண்டது.
ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை, டுவைன் பிராவோவின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை நோக்கி முன்னேறியது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த ஆட்டத்தில் கேதார் ஜாதவ் காயம் காரணமாக 14 ரன்களுக்கு “ரிடையர்ட் ஹர்ட்’ முறையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் மீண்டும் களம் கண்ட கேதார் ஜாதவ், ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். அவர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து ஜாதவ் விலகியுள்ளார். சென்னை அணியின் பேட்டிங் பிரிவில் முக்கிய பலமாக இருப்பார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவர் விலகியிருப்பது சென்னை அணிக்கு பின்னடைவை உருவாக்கும் எனத் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.