தனுஷ் படத்த்தில் நடிக்க ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோவை இறக்குமதி செய்ய தீவிரம்…!
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துவரும் பியர்ஸ் ப்ராஸ்னனை ரஜினி படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவைக்க முயற்சிகள்நடைபெற்று வருகிறது.
தற்போது ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறார். கடந்த ஆண்டு தனுஷை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் அல் பசீனோ, ராபர்ட் டி நீரோ ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த நிறுவனம் விஜய்யின் மெர்சல் படத்தில் கவனம் செலுத்தியதால் இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ளது. மேலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துவரும் பியர்ஸ் ப்ராஸ்னனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.