6 மணி நேரம் மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மூடப்பட உள்ளது…!
ஆறு மணி நேரம் மும்பை விமான நிலையத்தின் முதன்மையான ஓடுபாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மூடப்பட உள்ளது. இந்தியாவில் மிக அதிகமான விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களில் மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்குள்ள முதன்மையான ஓடுபாதையில் மணிக்கு 48 விமானங்கள் வந்துசெல்ல முடியும். இரண்டாம் நிலை ஓடுபாதையில் மணிக்கு 35விமானங்கள் வந்துசெல்ல முடியும். சராசரியாக மும்பை விமான நிலையத்துக்கு ஒருநாளைக்குத் தொள்ளாயிரத்து எழுபது விமானங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் முதன்மையான ஓடுபாதையில் பருவமழைக்காலத்துக்கு முந்தைய பராமரிப்புப் பணிகள் செய்வதற்காக விமான நிலையம் பகல் 11மணி முதல் மாலை 5மணி வரை மூடப்பட்டது. இதேபோல் செவ்வாய்க்கிழமை பகல் 11 மணி முதல் மாலை 5மணி வரை மூடப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.