நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமாகப்பட்டதா? அர்ச்சனாவிடம் கமல் கேள்வி .!
புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவை அழ வைக்க தந்தையின் பெயரை எடுத்த நிஷாவின் யுக்தி நியாயமாகப்பட்டதா என்று கமல் கேள்வி கேட்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானதது 69நாட்களாக ஒளிப்பரப்பப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் கமல் நேரலையில் தோன்றி பல பிரச்சனைகளுக்கு தீர்வை கூறுவதுடன்,பலரை வச்சு செய்வதும் வழக்கம் .அதனுடன் இன்று இரண்டு பேர் வெளியாக உள்ளதாகவும் கமல்ஹாசன் பர்ஸ்ட் புரோமோவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில், புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவின் தந்தையை குறித்து நிஷா பேசிய விவகாரம் குறித்து கேட்கிறார். கமல்ஹாசன் அர்ச்சனாவிடம் நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமாகப்பட்டதா என்று கேள்வி கேட்க ,இல்லை என்னால் அந்த சூழலை கையாள முடியவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார்.
மேலும் நீர், நெருப்பு என்பதையும் தாண்டி நான் எதிர்பார்க்காத நிஷாவை பார்த்ததாக கமல் கூற எந்த இடத்திலையும் நான் தவறாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை என்று நிஷா கூறுகிறார்.அதற்கு கமல் நீங்கள் பயன்படுத்தி விட்டீர்களே என்று கூற இல்லை சார் நான் பண்ணது தவறு இல்லை என்று எந்த இடத்திலையும் கூறவில்லை என்று நிஷா கூறுகிறார்.அதற்கு அது பார்க்கிறவங்களுக்கு தெரிய வில்லை.யோசிக்காமல் உங்களால் செய்ய முடியுமா என்று கேள்வி கேட்பதுடன் புரோமோ முடிவடைகிறது.இதோ அந்த வீடியோ
#BiggBossTamil இல் இன்று.. #Day69 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/apTjDp1XeQ
— Vijay Television (@vijaytelevision) December 12, 2020