உலகின் 10 “Magnetic Cities” பட்டியல் வெளியீடு.! லண்டன் தொடர்ந்து சாதனை.!

Default Image

உலகின் 10 “Magnetic Cities” பட்டியலை வெளியிட்டது குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ். தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்து லண்டன் சாதனை. 

குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் உலகின் மிக Magnetic Cities நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மோரி மெமோரியல் ஃபவுண்டேஷனின் நகர்ப்புற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட, காந்த நகரங்களின் குறியீடானது அதிகாரப்பூர்வ தரவு மற்றும் ஆய்வு செய்த அனைத்து 48 நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுடன் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது.

குளோபல் பவர் சிட்டி குறியீட்டில் தரவரிசைக்கான முதன்மைக் காரணி காந்தவியல் ஆகும். உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் மூலதனத்தை ஈர்க்க இந்த நகரங்களின் திறனை எடுத்துக்கொள்கிறது. 70 நடவடிக்கைகளை இது அடிப்படையாகக் கொண்டது. இதில் பொருளாதாரம், ஆராய்ச்சி, வளர்ச்சி, அணுகல் போன்றவைகள் அடங்கும்.

உலகின் முதல் 10 Magnetic Cities பட்டியல் இங்கே:

1.லண்டன்

பிரிட்டிஷ் தலைநகரம் உலகின் Magnetic Cities பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. லண்டனுக்கு சுற்றுச்சூழல் தவிர அனைத்து பிரிவுகளிலும் சிறந்த மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. கலாச்சார தொடர்பு மற்றும் அணுகல் விஷயத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.

2.நியூயார்க்

நியூயார்க் ஒரு பிரபலமான நகரமாக இருந்து Magnetic Cities பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரத்தில் சிறப்பாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் வாழ்வாதார மதிப்பெண் சரிவைக் கண்டுள்ளது.

3.டோக்கியோ

நியூயார்க்கைப் போலவே, டோக்கியோவும் அதன் வாழ்வாதார மதிப்பெண்ணில் சரிவைக் கண்டுள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் அணுகல் விஷயத்தில் சிறந்து விளங்கியுள்ளது. இதனால் Magnetic Cities பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

4.பாரிஸ்

பொருளாதார பிரிவில் அதன் மதிப்பெண்களை மேம்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்த மதிப்பெண் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் நகர சுகாதாரத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு பாரிஸ் சாட்சியாக இருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

5.சிங்கப்பூர்

சிங்கப்பூர் இப்போது உலகின் Magnetic Cities ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. கலாச்சார தொடர்பு தவிர அனைத்து பகுதிகளிலும் இது மேம்பட்ட தரவரிசையைக் கண்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஐந்து இடங்களில் ஆம்ஸ்டர்டாம், பெர்லின், சியோல், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்