ஜீன்ஸ், டி-ஷர்ட், செருப்புகளுக்கு தடை – வாரத்திற்கு ஒரு முறை காதி.!
மகாராஷ்டிரா அரசு ஜீன்ஸ், டி-ஷர்ட்டுகள் மற்றும் செருப்புகளை தடைசெய்து, வாரத்திற்கு ஒரு முறை காதி அணியுமாறு ஊழியர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
அதாவது, ஊழியர்கள் மற்றும் அரசாங்கப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள், ஒரு அரசு ஊழியருக்கு பொருத்தமற்றதாகக் கருதப்படும் வகையில் ஆடை அணிவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களைப் பற்றி மக்களின் மனதில் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கி வருகிறது என்று பொது நிர்வாகத் துறை டிசம்பர் 8 அன்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் காதி அணிய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உடை பொருத்தமற்றது மற்றும் அசுத்தமானது என்றால், அது அவர்களின் வேலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெண் ஊழியர்கள், உறுப்பினர்கள் செருப்பு அல்லது ஷூ அணிய வேண்டும். ஆண்கள் ஷூ மட்டுமே அணிய வேண்டும். அலுவலகத்திற்குள் செப்பல்ஸ் அனுமதி கிடையாது. அதிக வண்ணங்கள் மற்றும் விசித்திரமான எம்பிராய்டரி வடிவங்கள் அல்லது படங்கள் ஆடையில் இருக்கக்கூடாது. அலுவலகங்களில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.