முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் மாதுளை!
முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இன்று நாகரீகம் வளர்ந்துள்ளதால், நமது உணவு முறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நமது கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளில் இது ஏற்பட்டுள்ள நாட்டம், நமது சரும அஆரோக்கியதை மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. இதனால், நமது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க வழிவகை செய்கிறது.
தற்போது இந்த பதிவில், முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- முட்டை வெள்ளைக்கரு
- தேன்
- மாதுளை ஜூஸ்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் மாதுளை ஜூஸ் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். முகத்தில் பூசிய பின் அரை மணிநேரம் கழித்து, தூய நீரினால் முத்தை கழுவினால் எண்ணெய் பசை போய்விடும்.