அவசர கால நிதியில் இருந்து 73.7 பில்லியனை பயன்படுத்த ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்!

கொரோனா வைரஸ் காரணமாக நலிவடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்த அவசர கால நிதியில் இருந்து 73.7 பில்லியனை பயன்படுத்த ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு, அணைத்து நாடுகளில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், ஜப்பானிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நலிவடைந்த பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலா துறையை மேம்படுத்தவும் மேலும் பல சீரமைப்புகளை மேற்கொள்ளவும், வசர கால நிதியில் இருந்து 73.7 பில்லியனை பயன்படுத்த ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், குறைந்த வருமானம் கொண்ட பெற்றோருக்கு அதிக நிதி உதவியை வழங்க அரசாங்கம் 73.69 பில்லியன் யென் பயன்படுத்தும். தொற்றுநோயால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பொருளாதார விளைவுகளில் நேரடியாக கவனம் செலுத்துவதற்காக மொத்தம் 11.5 டிரில்லியன் யென் ஒதுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.