பசு பாதுகாப்பு மசோதாவால் 90 சதவீத மக்கள் மகிழ்ச்சி – எடியூரப்பா

Default Image

கர்நாடகாவில் பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் , இந்த மசோதாவால் 90 சதவீத மக்கள் மகிழ்ச்சியடைவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேலும் எடியூரப்பா கூறுகையில்,”பசுக்கள் இந்திய பாரம்பரியத்தில் செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன.கைவிடப்பட்ட பசுக்களுக்கான வசதிகளை நாங்கள் வழங்குவோம். இந்த மசோதாவில் 90 சதவீத மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்,” எனக் கூறினார்.

அண்மையில் கர்நாடக சட்டசபையில்  பசுவதை தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதா கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இந்த மசோதாவை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பிரபு சவுகான் தாக்கல் செய்தார்.ஆனால் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, இ காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், ஜனதா தள எம்.எல்.ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்த மசோதாவின் படி , மூன்று மற்றும் ஏழு ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் அல்லது ரூ .5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த குற்றங்களுக்கு ரூ .10 லட்சம் வரை அபராதமும், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்