வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி.. உச்சநீதிமன்றத்தில் விவசாய அமைப்பு மனு தாக்கல்..!
சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு விவசாய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிசான் யூனியன் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மூன்று புதிய சட்டங்கள் விவசாயத்தை வணிகமயமாக்குவதற்கு வழி வகுக்கும் என்று இந்திய கிசான் யூனியனின் தலைவர் வனுப்பிரதாப் சிங் கூறினார். மேலும், விவசாயி கார்ப்பரேட்டுகளின் தயவில் இருக்க வேண்டும். போதுமான விவாதம் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளளோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதிலிருந்து புதிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் நேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ரயில் பாதையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விரைவில் தேதியை அறிவிக்கப்படும் என்றும் கூறினார். போராட்டங்களை தீவிரப்படுத்துவதோடு, தேசிய தலைநகருக்கு செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போராட்டங்களை தொடங்குவதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன.