“அந்தாதூன்” தமிழ் ரீமேக்கில் சிம்ரன் .!
இந்தியில் மெகா ஹிட்டான அந்தாதூன் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவதை தொடர்ந்து அதில் தபு நடித்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .
மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.சமீபத்தில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை இயக்கி வரவேற்பை பெற்ற ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் அந்தாதூன் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளார்.ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரஷாந்த் அவர்களும் ,தபு கதாபாத்திரத்தில் சிம்பு அவர்களும் நடிக்கவுள்ளனர் .கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் இந்த படத்தில் நடிக்கவிருப்பது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,இந்திய சினிமாவின் மைல்கல் தான் அந்தாதூன் திரைப்படம் .இதில் தபு கதாபாத்திரத்தில் நான் நடிப்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு.அந்த கேரக்டர் படம் முழுவதும் மிகவும் தைரியமான மற்றும் சவாலான கேரக்டராக இருக்கும் என்று கூறி சிம்ரன் மீண்டும் பிரஷாந்துடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் ,ஜே.ஜே.ப்ரெட்டிரிக்குடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.