நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகுற அளவுக்கு நிஷா பேசியிருக்காங்க .! அர்ச்சனாவிடம் வாதிடும் அனிதா .!
புதிய மனிதா டாஸ்க்கில் நிஷா அர்ச்சனாவின் தந்தை குறித்து பேசி அவர் அழுததால் தான் சுவாரஸ்யம் குறைந்ததாக அனிதா கூறுகிறார்.
நேற்றைய தினம் புதிய மனிதா டாஸ்க்கிலும் ,வீட்டின் பிற செயல்களிலும் ஈடுபாடு குறைவாக விளையாடிய ஜித்தன் ரமேஷ் மற்றும் அனிதாவை ஓய்வு அறைக்கு அனுப்பியிருந்தார்கள் .இதற்கு அனிதா பல கேள்விகளை ஹவுஸ்மேட்களிடம் கேட்டார் . ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் புரோமோவில் ,நிஷா அவர்கள் அர்ச்சனாவின் தந்தையின் பெயரை இழுத்து அழ வைத்ததால் தான் அந்த டாஸ்க்கின் சுவாரசியம் குறைந்ததாகவும் ,அழ வைத்த நிஷா சிறப்பாக விளையாடியவர், வீட்டில் தனது கேப்டன் வேலையை சரியாக செய்த நான் சுவாரசியம் குறைவான போட்டியாளரா என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை ரியோவின் முன் வைத்திருந்தார் .
இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில்,புதிய மனிதா டாஸ்க்கில் நிஷா தந்தையை குறித்து அர்ச்சனாவிடம் கேட்ட பின் ,பஸர் அடிப்பதற்கு முன்னுள்ள கடைசி பத்து நிமிடத்தில் தான் நான் உடைந்ததாக கூறிய அர்ச்சனா ,அந்த 10 நிமிடம் கூட டாஸ்க் தானே என்று அனிதா கூறுகிறார் . நீங்கள் அழுததால் தான் சுவாரஸ்யம் குறைந்ததாக கூறியதால் இதை கூறுவதாக அர்ச்சனா கூறுகிறார்.
அதற்கு அனிதா நீங்க அழுததால் என்று சொல்லவில்லை,நிஷா அந்த டாப்பிக்கை ஆரம்பித்ததால் தான் அந்த டாஸ்க் குலைந்ததாக கூற நான் அழுததாக கூறியதால் தான் இதை கூறியதாக அர்ச்சனா கூறி விட்டு அங்கிருந்து நகர நீங்களே இவ்வளவு சீரியஸ் ஆகுற அளவுக்கு நிஷா பேசியிருக்காங்க என்று அனிதா கூறுகிறார்.மொத்தத்தில் இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day68 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/fWqNX57lzY
— Vijay Television (@vijaytelevision) December 11, 2020