வில்லன் வேடத்தில் இறங்கும் கௌதம் கார்த்திக்.! இயக்குனர் யார் தெரியுமா.?
அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோ மற்றும் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வருபவர் கௌதம் கார்த்திக்.இவர் சிம்புவுடன் மஃப்டி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது இவர் தட்சிணாமூர்த்தி ராமர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் இரண்டு வேடங்களும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும்,அவருக்கு இது புதிய அனுபவமாக இருக்கும் என்றும்,இதில் ரொமான்ஸ் காட்சிகள் இல்லை என்றாலும் முன்னணி நடிகை ஒருவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் மதுரையை அடித்தளமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் 80ஸ்-களில் ஹீரோவாக வலம் வந்த முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார் . விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்த படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.