IPL 2018:எச்சரிக்கை …!சென்னை -கொல்கத்தா போட்டியை பார்க்க செல்வோர்கள் இதையெல்லாம் கொண்டு செல்ல வேண்டாம் …!
ஐ.பி.எல் போட்டி சென்னையில் நாளை திட்டமிட்டபடி நடைபெற உள்ள நிலையில், கறுப்பு சட்டை அணிந்து வந்தால் மைதானத்துக்குள் நுழைய அனுமதியில்லையாம். மேலும் ரகசிய கேமராக்கள் அசம்பாவிதங்களை தவிர்க்க வைக்கப்பட்டுள்ளதாம்.
ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் ராஜிவ் சுக்லா ,சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துவிட்டார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்தத் தவறியது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தவிடமாட்டோம் என்று சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாது என்றும், சென்னை போட்டிகளை இடம் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தவிர்க்க சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். எத்தைகைய சூழலையும் கையாளக்கூடிய அளவில் ஏற்பாடுகள் ஐ.பி.எல்-க்காக செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, கறுப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களுக்கு சென்னை ஐ.பி.எல் போட்டியைக் காண அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தீவிரமாக கண்காணிக்க மைதானத்தில் ஏராளமான ரகசிய காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.