IPL 2018: உலகம் முழுவதும் ஐபிஎல் என்று தேடினாலும் சரி, இந்தியாவில் தேடினாலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி எல்லா இடங்களிலும் யெல்லோ ஜெர்ஸிதான் மாஸ்…!
11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பிராவோ அதிரடியால் வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, பிராவோ உள்ளிட்ட சில வீரர்களைத் தவிர பெரும்பலானோர் புதிய வீரர்களாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.
போட்டிகளைக் காண குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது சி,டி,இ, தளத்துக்கு இந்த விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்.காம், புக்மைஷோ.காம் ஆகிய தளத்தில் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்
ஐபிஎல் டிக்கெட்ஸ்’ குறித்த கூகுள் தேடலில் அதிகம் தேடிய மாநிலம் தமிழகம்தான். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸின் ரீஎன்ட்ரி. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கர்நாடகமும் மூன்றாம் இடத்தில் புதுச்சேரியும் உள்ளன.
`ஐபிஎல் டிக்கெட்ஸ்’ குறித்து ‘ www.chennaisuperkings.com’,“சென்னை சூப்பர் கிங்ஸ்’,`ஐபிஎல் டிக்கெட் ஃப்ரைஸ் இன் சென்னை’ ஆகியவற்றை அதிகமாகத் தேடியுள்ளனர். இது தொடர்பாக மேலும் `டிக்கெட் அட்மிஷன்’,`புக் மை ஷோ’ ,`இந்தியன் ப்ரீமியர் லீக்’,`ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு’,`சீட்டிங் கெப்பாசிட்டி’ ஆகியவற்றையும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
ஐபிஎல் டிக்கெட்ஸ் என்ற தேடலில் டாப் இருபது தேடல்களில் வேறு எந்த அணியின் பெயருமே இடம்பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யம். உலகம் முழுவதும் ஐபிஎல் என்று தேடினாலும் சரி, இந்தியாவில் தேடினாலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி எல்லா இடங்களிலும் யெல்லோ ஜெர்ஸிதான் மாஸ். ஐபிஎல் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பே கூகுள் தேடலில் மாஸ் காட்டும் சிஎஸ்கே. இந்த முறை களமிறங்கினாலே கெத்துக் காட்டும் என்பதில் ஆச்சர்யமில்லை. ஐபிஎல் தொடரில் இணையம் விரும்பும் அணி என்பது எப்போதும் சிஎஸ்கே தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.