#FarmersProtest:குளிரில் நடுங்கும் விவசாயிகளுக்கு இலவச ஸ்வெட்டர் வழங்கி உதவிய விவசாயி மகன் .!

Default Image

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட்டுகளை விவசாயின் மகன் வழங்கி உதவியுள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 16-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி-ஹரியானா எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட்டுகளை விவசாயின் மகன் ஒருவர் இலவசமாக வழங்கி உதவியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள விவசாயி ஒருவரின் மகனான ஷகீல் முகமது குரேஷி என்ற நபர் வடக்கு டெல்லியின் நரேலாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் .இவர் தினமும் காலை 8 மணியளவில் சாலையோரத்தில் உள்ள தனது கடையை திறந்து விவசாய போராட்டத்தில் குளிரில் நடுங்கும் விவசாயிகளுக்கு சுமார் 300 ஜாக்கெட்டுகள் மற்றும் ஸ்வெட்டர்களை இலவசமாக வழங்கியுள்ளார் .இது குறித்து குரேஷி கூறுகையில் என் தந்தையும் ஒரு விவசாயி,எனவே அவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானது என்பது தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ,சில தனி நபர்களும் விவசாயிகளின் உணவு உள்ளிட்ட அன்றாட தேவைகளையும் விநியோகித்து வருகின்றனர்.மேலும் சிலர் மருத்துவ முகாம்களையும் அமைத்து விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்