எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்… ரசிகர்களுக்கு தளபதி-65 குறித்து மாஸான அப்டேட் கொடுத்த சன்பிக்ச்சர்ஸ்..!
தளபதி விஜய்யின் அடுத்த படத்தினை நெல்சன் இயக்க அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை தயாரித்துள்ளது . தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 ,,தனுஷின் D44 , சூர்யாவின் 40வது படத்தையும் தயாரிக்கவுள்ளது .
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது .அதன் படி தற்போது தளபதி ரசிகர்களுக்காக தளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது .தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் .மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் நெல்சன் மற்றும் விஜய் அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனருடன் பேசுவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் .தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.மேலும் நெல்சன் அவர்கள் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தினை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
We are happy to announce Thalapathy @actorvijay ’s #Thalapathy65bySunPictures directed by @nelsondilpkumar and music by @anirudhofficial #Thalapathy65 pic.twitter.com/7Gxg1uwy22
— Sun Pictures (@sunpictures) December 10, 2020