இன்று 5 மணிக்கு வெளியாகிறது சன் பிக்சர்ஸின் முக்கிய அறிவிப்பு.!
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை தயாரித்துள்ளது . தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் அடுத்ததாக விஜய்யின் தளபதி 65 ,,தனுஷின் D44 , சூர்யாவின் 40வது படத்தையும் தயாரிக்கவுள்ளது
தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸ்ஸான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் இன்று ,நாளை ,ஞாயிறு மற்றும் டிச.,31 ஆகிய தினங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது .இதில் ஏதேனும் ஒரு தினத்தில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அண்ணாத்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கருதப்படுகிறது.அதே போன்று டிசம்பர் 31-ம் தேதி தளபதி65 படத்தின் அப்டேட்டும் , மீதமுள்ள தினங்களில் தனுஷின் D40, சூர்யா 40 ஆகிய படங்களின் அப்டேட் வெளிவர உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர் .தற்போது இந்த நான்கு அப்டேட்களில் ஒன்று இன்று மாலை 5 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது .இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
We don’t want to make you wait! Mega announcement coming Today at 5 PM!#SunPicturesAnnouncementAt5 pic.twitter.com/56UyVGF8Fo
— Sun Pictures (@sunpictures) December 10, 2020