பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? கமல்ஹாசன் எதிர்ப்பு..!
சென்னையில் கடந்த 2015-ல் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், கூவம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பொது மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக கூவம் ஆற்றை தூர்வாரவும், மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கூவம், அடையாறுகளின் 1,000 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை இடித்து விட்டு இங்கிருக்கும் மக்களை சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளில் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மறுகுடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தங்கள் குழந்தைகள் படிப்பதாக கூறி சில குடும்பங்கள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அவர்களுக்கு கால அவகாசம் வழங்கியது.
நேற்று குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் கூவம் ஆற்றுக்குள் இறங்கி நின்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என தெரிவித்துள்ளார்.
கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்?
— Kamal Haasan (@ikamalhaasan) December 10, 2020