PF பயனாளர்களே ஒரு குட் நியூஸ், உங்கள் மொத்த பணமும் ஒரே தவணையில் இதோ !
EPFO 8.50 சதவீத வட்டி விகிதத்தை மொத்தமாக சுமார் 19 கோடி பிஎஃப் பயனாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியை சந்தித்த நிலையில், அண்மையில் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதத்திலிருந்து, 8.50 சதவீதமாக குறைத்தது. மேலும், 8.50% வட்டி விகிதத்தையும், 8.15 சதவீதம் மற்றும் 0.35 சதவீதம் என இரண்டு தவணைகளாக வழங்குவதாக தெரிவித்தது.
பொதுவாக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களால் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை, பங்கு சந்தை, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் என பல்வேறு இடங்களில், அரசு முதலீடு செய்யும். இதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை பயனாளர்களுக்கு வழங்கும். அந்த வகையில் நீண்ட கால அடிப்படையில் மேற்கொண்ட இந்த முதலீடுகள் காரணமாக, பங்கு சந்தை இறக்கத்தை சந்தித்தபோது எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம், இரு தவணைகளில் வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த முடிவை EPFO அமைப்பு மாற்றிக்கொண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஏனெனில் தற்போது சந்தை நிலவரங்கள் எதிர்பார்த்த வருமானத்தை விட அதிகம் கிடைக்கக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், அதனால் EPFO 8.50 சதவீத வட்டி விகிதத்தை மொத்தமாக சுமார் 19 கோடி பிஎஃப் பயனாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.