IPL 2018: நான் ரொம்ப மோசம விளையாடினேன் …!தோல்விக்கு நான்தான் காரணம்…!விராத் கோலி ஓபன் டாக் …!
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் , பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது .
கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 27 பந்துகளை எதிர்கொண்ட மெக்கல்லம் 43 ரன்களை எடுத்தார். விராட் கோலி 31 ரன்களும், டி வில்லியர்ஸ் 44 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்களில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் சுனில் நரைன் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 50 ரன்களைக் கடந்தார். பின்னர் வந்த வீரர்கள் சீராக ரன் சேர்த்ததால், கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை எளிதாக பதிவு செய்தது.
இது தொடர்பில் போட்டியின் பின்னர் கருத்து வெளியிட்ட கோஹ்லி, “15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். நான் நிறைய பந்துகளை விரயம் செய்தேன்.
பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் டிவில்லியர்ஸும் நானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தோம். ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை இந்தப் போட்டியிலிருந்து நிறைய அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.