ஆப்பிளின் புதிய “AirPods Max” ஹெட்போன்.. ஐ போன் 11-ஐ விட விலை அதிகம்!!

Default Image

ஆப்பிள் நிறுவனம், தனது புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒவர்-ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 40எம்எம் டைனமிக் டிரைவர், உள்ளிட்ட புதிய பல வசதிகள் உள்ளது.

ஆப்பிள் நிர்வாகம், அண்மையில் தனது ஐ போன் 12 சீரியஸை வெளியிட்டுள்ளது. இந்த ஐ போன் 12 சீரியஸ், அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைதொடர்ந்து தனது புதிய M1 சிப்செட் கொண்ட ஆப்பிள் மேக், மேக்பூக், மேக் மினி உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், நேற்று இரவு நடந்த விழாவில் ஆப்பிள் தனது புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்போனில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய 40mm டைனமிக் டிரைவர் பொருத்தப்பட்டுள்ளது. டிசைனை பொறுத்தளவில் இதில் அகௌஸ்டிக் (acoustic) டிசைனுடன் அறிமுகமானது. இதன் ஹெட்பேண்ட் பிரேம், ஸ்டெயின்லெஸ் ஸ்டிலால் உருவாக்கப்பட்டது. இதன் வளையும் தன்மை, தலையில் அணியும்போது ப்ரீமியம் பீல் குடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹெட்போனில் இருக்கும் டிஜிட்டல் கிரவுன் மூலம் நாம் வால்யூம், சாங் பிளேபேக், அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்ற செயல்களை செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இதில் ஆப்பிளின் H1 சிப்செட் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்பேஷியல் ஆடியோ, நாம் திரையரங்கில் படம்பார்க்கும்போது கேட்கும் ஒலி அனுபவத்தை தரும். இதில் 5.1, 7.1 மற்றும் டால்பி அட்மோஸ் சவுண்ட்களை நாம் அனுபவிக்கலாம். பேட்டரியை பொறுத்தளவில், அதிகபட்சமாக 20 மணி நேரம் தாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன், ஸ்பேஸ் கிரே, சில்வர், கிரீன், ஸ்கை புளூ, பின்க் உள்ளிட்ட 4 நிறங்களில் வருவதாகவும், இது இந்தியாவில் ரூ. 59,900 என நிர்ணயம் செயப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐ போன் 11, ரூ. 54,999-க்கு விற்கப்பட்டு வருவதால் போனை விட ஹெட்போனின் விலை அதிகமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva