வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை ! ஓட்டுப் போட முடியாமல் போன தலைமை தேர்தல் அதிகாரி

Default Image

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் , தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா (Teeka Ram Meena )வாக்களிக்க முடியவில்லை.

இடுக்கி,திருவனந்தபுரம்,கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நேற்று நடைபெற்றது.இந்த 5 மாவட்டங்களில் 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிகள் உள்ளாட்சி தேர்தலில் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கேரள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து 2வது கட்ட தேர்தல் வரும் 10-ஆம் தேதியும், 3வது கட்ட தேர்தல் 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.ஆனால் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனா (Teeka Ram Meena )வாக்களிக்க முடியவில்லை.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால்  உள்ளாட்சித் தேர்தலில் அவர் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தனது பெயர் இடம்பெறாத நிலையில் உடனடியாக திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் விவரத்தைக் கூறினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது என்றும் கூறினார்.இதனால் வாக்களிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்