அரை நிர்வாணம் எதிரொலி …!யாருமே இனி உங்க கூட நடிக்க மாட்டோம் …!அதிரடியில் தெலுங்கு சினிமா ….

Default Image

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமீபத்தில்  சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் பாலியல் தொல்லை கொடுக்கும் திரைப் பிரபலங்களின் பெயர் பட்டியலை ஸ்ரீ லீக்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது.

Image result for ஸ்ரீ ரெட்டி

இந்த விவகாரத்தில் பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு மீது மறைமுக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் குற்றச்சாட்டுகளை சேகர் மறுத்துவிட்டார். அவர் மட்டுமின்றி பல்வேறு தெலுங்கு நடிகர்களும், நடிகைகளும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேசன் எதிரில் நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, ஸ்ரீ ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தெலுங்கு திரையுலுகில் மேலும் சர்ச்சையாக வெடித்தது.

Image result for ஸ்ரீ ரெட்டி

இந்நிலையில் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளரிடம் பேசியுள்ள தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா, “ஸ்ரீ ரெட்டியின் செயல் எங்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையில்லை. அவர் போராட்டம் நடத்துவதற்கு என்னை சந்தித்தார். நான் அவருக்கு உரிய உதவிகள் செய்வதாக கூறினேன். ஆனால் ஊடங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது நாங்கள் துறை ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அவரின் அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தை சேர்ந்த எந்த கலைஞரும் இனி நடிக்க மாட்டார்கள். அவ்வாறு நடித்தால் அவர்களும் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.” என்று கூறினார்.Image result for ஸ்ரீ ரெட்டி

இதுதொடர்பாக பேசிய இயக்குநர் தேஜா, “நாங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மதிக்கிறோம். உறுப்பினர் அட்டை பெறுவது என்பது நீண்ட கால பணியாகும். அதற்காக நாங்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகிறோம். அத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்ரீ ரெட்டியின் செயலால் தற்போது ஊடங்களுக்கு பதிலளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஸ்ரீ ரெட்டி கூறுவதில் உண்மை இல்லை.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவர் இப்படி செய்வதின் மூலம் எங்களை மிரட்ட முடியாது. அவர் சங்க விதிகளை பின்பற்றியிருக்க வேண்டும். நாங்கள் பெண்களை மிகவும் மதிப்பவர்கள். எங்கள் சங்கத்தின் பெண் உறுப்பினர்களிடம் கேட்டால் உண்மை தெரியும். ஸ்ரீ ரெட்டி உறுப்பினர் உரிமத்தை ரத்து செய்த போது, அவருக்காக நாங்கள் விண்ணப்பங்களை வழங்கினோம். ஆனால் அவர் தான் விதிமுறைகளை பின்பற்றவில்லை. அவர் விண்ணப்பத்திற்காக கட்டணத்தை மட்டுமே வழங்கினார். உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டனத்தை வழங்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது தான், அவர் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.” என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்