எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8848.86 மீட்டராக அறிவிப்பு!

Default Image

நேபாளமும் சீனாவும் புதியதாக உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கண்டறிந்ததில் 8848.86 மீட்டர் நீளம் கொண்டது என தெரியவந்துள்ளது.

உலகின் மிக உயரமான சிகரமாகிய எவரெஸ்ட் சிகரம் இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 200 மீட்டர் அதாவது 30 ஆயிரத்து 200 அடி இருக்கும் என கூறப்பட்டது. இந்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர் என 1954 இல் இந்தியாவின் கணக்கெடுப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டின் பேரழிவு மற்றும் அப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என அண்மையில் விவாதங்கள் எழுந்தது.

இதனை அடுத்து இந்த எவரெஸ்ட் மலையின் உயரத்தை துல்லியமாக அளவிட நேபாள அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, தற்போது துல்லியமாக எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உள்ளது என தெரிவித்துள்ளது. இந்தியாவின் முந்தைய கணக்கீட்டை பார்க்கையில் தற்போது நேபாளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அளவீடு 86 சென்டிமீட்டர் அதிகமாக உள்ளது. இறுதியாக தற்பொழுது எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்