ட்விட்டரில் முதல் மனைவி உட்பட அனைவரையும் அன்பாலோ செய்த பாகிஸ்தான் பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் முதல் மனைவி உட்பட அனைவரையும் அன்பாலோ செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் உட்பட அனைவரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அன்பாலோ செய்துள்ளார். ட்விட்டரில் இம்ரான் கானை இதுவரை 12.9 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் நெட்டிசன்கள் கண்களில் பட, “முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கான் தாழ்ந்தவர்” என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்த தி நியூஸ் இன்டர்நேஷனலின் வெளியிட்டுள்ள ஒரு செய்திதொகுப்பில், நேற்று மாலை பிரதமர் இம்ரான் கானின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் யாரையும் பின்தொடரவில்லை என்பதைக் கவனித்தனர். 2010 மார்ச் மாதத்தில் ட்விட்டர் கணக்கை தொடங்கிய பிரதமர் இம்ரான் கான், தனது முதல் மனைவியான ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்டார். அப்பொழுதும் அவர் அன்பாலோ செய்யாத நிலையில், தற்பொழுது அவர் அன்பாலோ செய்துள்ளார்.