ஊரடங்கு உத்தரவை மீறியதால் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கைது!
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அதனை மீறி தர்ணா போராட்டம் நடத்தியதற்காக உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் இணைந்து கடந்த இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் வைத்து விவசாயிகள் போராட்டத்திற்கான பேரணியை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள் நடத்த இருந்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், அவர் தனது வீட்டு வாசலில் வைத்தே தர்ணா போராட்டம் மேற்கொண்டுள்ளார். எனவே 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பொழுது அதனை மீறி அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் 3 மணி நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், போராட்டங்களில் கலந்து கொண்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடக்குமுறை அரசாங்கத்தின் கீழ் புரட்சிகரமான ஒரு போராட்டத்தை உருவாக்குவதற்கு அதிக நேரம் எடுக்காது எனவும், விவசாயிகளின் நலனுக்காகவாவது பாஜக வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க சட்டம் ஒன்றை இயக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.