பெருமைக்குரிய விஷயம்: தமிழுக்கு முக்கியத்துவம் அளித்த ட்விட்டர் இந்தியா.!
2020-ஆம் ஆண்டின் அதிக லைக், ரிட்வீட், அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் போன்ற சிறப்புகளை குறித்து ட்விட்டர் இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதில், நடிகர் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரசிகர்களுடன் செல்பி எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த செல்பி இணையத்தில் வைரலாகி பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி தான் என்று ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.
இதையடுத்து விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா கர்பமாக இருக்கும்போது இருவரும் சேர்ந்து எடுத்த பபுகைப்படம் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார். அதுவே அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் எனவும் ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்த ஆண்டு ட்விட்டர் இந்தியா தமிழுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதாகும். அதாவது, இந்த மூன்று அறிவிப்பிலும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளது. இந்தாண்டு தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து ட்விட்டர் இந்தியா பதிவிட்டுள்ளதை தொடர்ந்து பலரும் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தமிழுக்கு முக்கியத்துவம் அளித்தது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
The most Quoted Tweet of 2020
2020 का सबसे ज्यादा क़ोट किया गया ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் pic.twitter.com/aqXTnaZI0h— Twitter India (@TwitterIndia) December 8, 2020
The most Retweeted Tweet of 2020
2020 में सबसे ज्यादा रीट्वीट हुआ ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் ரிடுவீட் செய்யப்பட்டடுவீட் pic.twitter.com/JpCT4y6fJm— Twitter India (@TwitterIndia) December 8, 2020