உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்த குவாலியர் மற்றும் ஓர்ச்சா!
ஐநா சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓரிச்சா ஆகிய நகரங்களை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஐநா சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ உலக அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா ஆகிய நகரங்களை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களும் உலக அளவிலான சுற்றுலா நகரங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக மாநில செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறியதாவது, யுனெஸ்கோ பாரம்பரிய நகரம் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் மூலம் குவாலியர், ஓர்ச்சா நகரங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். யுனெஸ்கோவின் அங்கீகாரத்துக்கு, யுனெஸ்கோவும், மாநில சுற்றுலாத் துறையும் இணைந்து இந்த இரு நகரங்களையும் மேலும் அழகுபடுத்துவதற்கானது திட்டத்தை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
குவாலியர் கோட்டை ஒன்பதாம் நூற்றாண்டில் உருவானதாகும். இந்த கோட்டையை பழங்காலத்து மன்னர்கள் ஆண்டு வந்த நிலையில், அவர்கள் விட்டுச்சென்ற நினைவுச்சின்னங்கள் கோட்டைகளிலும், அரண்மனைகளிலும் இன்றம் காணப்படுகின்றன. குவாலியர் நகரம் அரண்மனைகள் கோயில்களுக்கு பெயர் போனதாக உள்ளது.
ஓர்ச்சா நகரத்தில் உள்ள கோவில்களும், அரண்மனைகளும் பிரபலமானவை. இவை 16ஆம் நூற்றாண்டில் புண்டேலா ராஜ்யத்தின் தலைநகராக இது திகழ்ந்தது. இங்கு ராஜ்மஹால், ஜஹாங்கீர் மஹால், ராம்ராஜா கோயில், ராய் பிரவின் மஹால் ஆகியவை இந்த நகரத்தின் புகழ்பெற்ற இடங்களாக விளங்குகின்றன