மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி…!லண்டனில் வினோதம் …!
மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியில், லண்டனில் நடைபெற்றது ,இதில் கீழே விழுந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 380 மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் மனைவிமார்களை முதுகில் தலைகீழாக தொங்கவிட்டபடி தூக்கிக் கொண்டு ஓடினர்.
போட்டியில் ஓடிக்கொண்டிருந்த ஒருவர் தனது மனைவியுடன் கீழே விழுந்ததில் அந்தப் பெண்ணுக்கு தண்டுவடம் உடைந்தது. வலியால் துடித்த அவர், அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.