பாரத் பந்த் : இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு ..!
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஹரியானா ,பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் கடந்த இன்றுடன் சேர்த்து 13 நாட்களாக நடந்து வருகிறது.
இதுவரை விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒரு முடிவு இல்லாத நிலையில், நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று நடைபெறுகிறது. விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் மத்திய அரசின் அழைப்பை ஏற்று விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், ஆனால் எந்தவொரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு தெரிவித்தாலும், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என்ற உறுதியில் உள்ளனர்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுடன் வருகின்ற நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.