பேருந்துகளில் 100% இருக்கை பயணம் .. தமிழக அரசு அனுமதி …!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 60% மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில் தற்பொழுது 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகளை அதிகரித்துக் கொள்ளவும் போக்குவரத்து கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து பொது சேவைகளும் நிறுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, படிப்படியாக பொது சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.