எலும்பு குறைபாட்டை நீக்கும் சப்போட்டாவின் சத்துக்கள் குறித்து அறியலாம் வாருங்கள்!

Default Image

சப்போட்டா பழம் இயற்கையில் நமக்கு ஈஸியாக கிடைக்கக்கூடிய ஒரு வரம். இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுக்கிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சப்போட்டாவின் நன்மைகள்

சப்போட்டா பழத்தில் அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுவதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுவதுடன் எலும்பு குறைபாடுகளையும் நீக்க இது மிகவும் உதவுகிறது. அதிக கால்ஷியம்  இருப்பதால் எலும்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது எலும்பு சம்பந்தமான குறைபாடு உள்ளவர்கள் நிச்சயம் அதிலிருந்து விடுபடலாம். இளம் வயதில் ஏற்படக்கூடிய முதுமை தோற்றம் மறையும்.

நல்லெண்ணெயுடன் இரவில் இதன் விதையை அரைத்து தலையில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூர்மையான கண்பார்வை தர இந்த சப்போட்டா பழம் உதவுகிறது. குடல் ஆரோக்கியமாக இருக்க இது உதவுவதுடன் இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் சத்து காரணமாக குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் முதல் கர்ப்பிணிகள் வரை பயமின்றி உண்ணலாம். மன அழுத்தம், தூக்கமின்மை பதட்டம் ஆகியவற்றை நீக்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்